தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு வகுப்புகளை பயிற்றுவிக்க பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 181 ல் கூட பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இன்று (செப்டம்பர் 5) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடி வரும் நிலையில், 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்க்கை சிறக்க பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
குறைந்த வட்டியில் இவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!