தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை?? அமலாகும் அவசர சட்டம்!அரசு எடுக்கும் அதிரடி முடிவு!!

0
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை?? அமலாகும் அவசர சட்டம்!அரசு எடுக்கும் அதிரடி முடிவு!!
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை?? அமலாகும் அவசர சட்டம்!அரசு எடுக்கும் அதிரடி முடிவு!!

தமிழகத்தில் பெரும்பாலானோர், ஆன்லைன் ரம்மி விளையாட்டால்  மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனைத் தடுக்க, அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்காக ஆலோசனை செய்து வருகிறது.

 அவசர சட்டம் :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, ஆன்லைன் விளையாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு தங்கள் பணத்தை இழந்து  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதற்கு தடை விதிக்க கோரி அண்மையில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான உரிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

rummy game

இந்நிலையில், கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு, எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது போல், தமிழகத்திலும் சட்டம் இயற்ற முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த பாதிப்புகளை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழு இன்னும் 2 வாரத்திற்குள் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இதைத் தடை விதிப்பதற்கான அவசர சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here