தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை?? உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடா?? வெளியான முக்கிய தகவல்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் தொடர்பான விளையாட்டுகள் மீது இளைஞர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, ஆன்லைனில் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால், இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

சமீபத்தில் விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு, ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் திறன் விளையாட்டுகள். இதனால், இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கும் வகையில், உயர் நீதி மன்றத்தின் தொடக்க விசாரணையிலேயே இடைக்கால தடை பெற வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை என்றால் உச்ச நிதி மன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.