தமிழகத்தில் 2 மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம் – நேரம் பார்த்து வளைத்து தீட்டுவதாக பயணிகள் ஆதங்கம்!!

0
தமிழகத்தில் 2 மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம் - நேரம் பார்த்து வளைத்து தீட்டுவதாக பயணிகள் ஆதங்கம்!!

தமிழகத்தில் பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், இந்த பிரச்சனையை சரி செய்யுமாறு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பயணிகள் வேண்டுகோள் :
தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை காரணமாக அக். 2 காந்தி ஜெயந்தி முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை, தங்கள் குடும்பத்துடன் கழிக்க  வெளியூர்களிலிருந்து  பேருந்துகள் மூலம், பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். இது போன்ற பண்டிகை கால தொடர் விடுமுறையை சாதகமாக்கிக் கொண்டு, பல ஆம்னி பேருந்துகள்  தங்கள் கட்டணங்களை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளனர்.
குறிப்பாக ஏசி படுக்கை வசதி பேருந்தில் ரூ.3,900ம், படுக்கை வசதி கொண்ட பஸ்ஸில் ரூ. 2, 400ம் பொதுவான கட்டணங்களாக பெரும்பாலான பேருந்துகளில் வாங்கப்படுகிறது. முன்பதிவு, செய்யும் பயணிகளிடமும் இந்த கட்டண கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து பேசிய பயணிகள், ஏலம் போன்று முடிவில்லாது தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் இந்த ஆம்னி பஸ் கட்டணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முறையான கட்டண நிர்ணயத்தை, அரசு அறிவிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here