தமிழகத்தில் விடப்பட்ட தொடர் விடுமுறை.., அதனால் ஏற்பட்ட சிக்கல்.., தவிக்கும் சாமானிய மக்கள்!!!

0
தமிழகத்தில் விடப்பட்ட தொடர் விடுமுறை.., அதனால் ஏற்பட்ட சிக்கல்.., தவிக்கும் சாமானிய மக்கள்!!!
தமிழகத்தில் விடப்பட்ட தொடர் விடுமுறை.., அதனால் ஏற்பட்ட சிக்கல்.., தவிக்கும் சாமானிய மக்கள்!!!

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை நிமித்தமாகவும், கல்வி ரீதியாகவும் ஏராளமானோர், அங்கேயே தங்கியிருந்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெரும்பாலானவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 11) முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவாக தீர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளனர். ஆனால் அதிலும் முன்பதிவுகள் தீர்ந்து விட்டதால், ஆம்னி பேருந்துகளை நம்பியே பலரும் உள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு, ஆம்னி பேருந்துகள் பயண கட்டணத்தை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதாவது A/C பேருந்தில் உட்கார்ந்து பயணம் செய்வதற்கே ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்…, இன்று முதல் அமல்.., மக்கள் வரவேற்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here