தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் வர ஒரே வழி இதுதான் – அரசு ஊழியர்களுக்கு முக்கிய கோரிக்கை!!

0
தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் வருமா?? முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட ஸ்டாலின்!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு குழுவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம்:

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு  வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது. தொடர்ந்து இந்த திட்டம், 2004ல் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை, ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சில அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு  இயக்கம் என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

pension

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை  ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கு அனைத்து அரசு ஊழியர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பல சாத்தியக்கூறுகள் இருந்தும் அரசு அதனை செய்ய மறுக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் கூட அண்மையில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கள், கோரிக்கை, அரசின் கவனத்தை ஈர்க்கும் வரை  நமது போராட்டம் தொடர வேண்டும் என அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here