தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம்  – அடுத்த கட்டத்தில் அரசு ஊழியர்கள்! போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

0
தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம்  - அடுத்த கட்டத்தில் அரசு ஊழியர்கள்! போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு!!

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்டோர் கூடி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டக் களத்தில் ஊழியர்கள் :

தமிழகத்தில், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த  பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில், ஏற்கனவே ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்த வகையில் தற்போது, சேலம் மாவட்டத்தின்  ஆட்சியர் அலுவலகம் முன் கூடிய 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்  திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அரசு ஊழியர் சங்க கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு இது குறித்து, பரிசீலிக்க வேண்டும் என முதல்வருக்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here