
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் அவர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கக் கல்வி முதலே அறிமுகப்படுத்தி வருகிறார். அதாவது, இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவை கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், காலை உணவு திட்டம் மாணவர்கள் பசியின்றி கல்வி கற்கவும் அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தியும் வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், தொடக்க கல்வி மாணவர்களின் அடிப்படை திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.கே.கே. குப்பண்ணன் என்பவர் ஆசிரியர் பணியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்திற்கு சரியான விளக்கம் அளிக்க வட்டாரக் கல்வி அலுவலர் நேரில் BEO அலுவலகம் வந்து விவரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு இல்லாமல் தவிக்கும் 2 லட்சம் பேர்., வெளியான அதிர்ச்சி தகவல்!!!