
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை விலை நிர்ணயத்தை வைத்து கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குரிய கேஸ் சிலிண்டர் விற்பனை விலை நிர்ணய பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் சென்னையில் ரூ.918.50க்கும், சேலத்தில் ரூ.936.50க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் டீக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ரூ.1,999.50க்கு விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் ரூ.203 அதிகரிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் கூடுதலாக ரூ.101.50 அதிகரித்தது பலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகை: தாம்பரம் to நாகர்கோவில் சிறப்பு ரயில்., இன்று முன்பதிவு தொடக்கம்!!!