தமிழகத்தில் புதிய மின்கட்டணம் குறித்து முக்கிய கருத்து – மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!!

0
தமிழகத்தில் புதிய மின்கட்டணம் குறித்து முக்கிய கருத்து - மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!!

தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு:

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதாவது மத்திய அரசின் அழுத்தம் காரணமாக 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கட்டண உயர்வுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல எதிர்ப்புகளை தெரிவித்தன.

மேலும் தமிழக அரசின் புதிய திருத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் நேற்று கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது தமிழக மின் வாரியம் சுமார் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் இந்த மின் கட்டண உயர்வு என்பது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவான அளவில், மக்களை பாதிக்காத வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

  1. 0 முதல் 50 வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோருக்கு நிலையான கட்டிடங்கள் மாதம் ஒன்றுக்கு 1 கிலோ வாட் ரூ.100 லிருந்து 75 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  2. 50 முதல் 100 கிலோ வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோருக்கு நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்றுக்கு 1 கிலோ வாட் ரூ.325 லிருந்து 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  3. 100 முதல் 112 கிலோவாட் வரை நிலைக்கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ.150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here