தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை.,உருவாகிறது புதிய புயல்? 48 மணி நேரத்தில் தீவிரம் அடைய வாய்ப்பு!!

0
தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை.,உருவாகிறது புதிய புயல்? 48 மணி நேரத்தில் தீவிரம் அடைய வாய்ப்பு!!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில், நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகீர் எச்சரிக்கை :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக, பரவலாக பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் தென்கிழக்கு வங்க கடலில், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக தமிழகத்தில், அடுத்த 3 மணி நேரத்தில் திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு, வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here