தமிழகத்தில் ஒரே குடும்பத்தின் 4 பேருக்கு குரங்கம்மை? அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!!

0
தமிழகத்தில் ஒரே குடும்பத்தின் 4 பேருக்கு குரங்கம்மை? அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில், நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள்  குரங்கு அம்மை நோய்  அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி :

தென்னாப்பிரிக்காவில், குரங்கம்மை என்ற  புதிய வகை வைரஸ் நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து, உடலின் சமநிலை குறைகிறது. சரியான சிகிச்சை பெறாதவர்கள், இறக்கக்கூடிய சூழ்நிலையும் இதனால் உருவாகிறது. இந்த நோய் ஆப்பிரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்பட்டது.

இந்தியாவில், முதல் முறையாக கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களிலும் வைரஸ் பரவல் காணப்பட்டது. தற்போது தமிழகத்தில் நாகர்கோவில் மாவட்டத்தில்  உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் இந்த குரங்கம்மை அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி, மாநில சுகாதாரத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here