அட்ரா சக்க., அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் ரூ.2000 கூடுதலாக வழங்க முடிவு! அமைச்சர் அறிவிப்பு!

0
அட்ரா சக்க., அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் ரூ.2000 கூடுதலாக வழங்க முடிவு! அமைச்சர் அறிவிப்பு!
அட்ரா சக்க., அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் ரூ.2000 கூடுதலாக வழங்க முடிவு! அமைச்சர் அறிவிப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் இந்த ஊழியர்களுக்கு, பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 2000 ரூபாய் ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு :

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகை, உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமீப காலமாக கோவில் நிலங்களை மீட்கும் பணி அமைச்சர் சேகர்பாபு தலைமையில், மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், அறநிலையத்துறை நில அளவையாளர்கள் 172 பேர் தொடர்ந்து தமிழகம் முழுவதும், நில அளவை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக, இவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது.

பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்த ஸ்ருதி.., கைதான 8 பேர் விடுதலை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இவர்களை கவுரவப்படுத்தும் விதமாக வரும் பிப்ரவரியில் இருந்து இவர்களுக்கு ரூபாய் 2000 ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here