அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

0
minister sellur raju
minister sellur raju

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆளும்கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள், தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் அதிமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சவரனுக்கு 208 ரூபாய் குறைந்த தங்கம் – பொதுமக்கள் நிம்மதி!!

அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தாக்கம் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here