இது கல்யாணமா இல்ல ஷங்கர் படமா? பாகுபலி பிரமாண்டத்தையும் மிஞ்சிய அமைச்சர் மகனின் திருமணம்!!

0
இது கல்யாணமா இல்ல ஷங்கர் படமா? பாகுபலி பிரமாண்டத்தையும் மிஞ்சிய அமைச்சர் மகனின் திருமணம்!!

மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் மகனுக்கு நடைபெற்ற திருமணத்தில், அரங்கேறிய முக்கிய பிரம்மாண்டங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் பிரம்மாண்டம்:

தமிழகத்தின், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக மதுரையைச் சேர்ந்த மூர்த்தி பதவி வகித்து வருகிறார். இவரது மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி திருமணம், மதுரை அருகே உள்ள ஒரு மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவின் ஏற்பாடுகள், கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. முதல்வர் பங்கேற்று நடத்தி வைத்த இந்த திருமணம், சங்கர் பட பிரம்மாண்டத்தை மிஞ்சும் அளவில்  அமைந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கோட்டை போன்ற நுழைவாயில், ஒரு லட்சம் பேர் அமரும் பந்தல், ஒரே நேரத்தில் 10,000 பேர் அமர்ந்து சாப்பிடும் டைனிங் ஹால், 2000 ஆடுகள், 5000 கோழிகள் போன்றவை வெட்டி சமைக்கப்பட்ட அசைவ உணவு, தேவாவின் இசை கச்சேரி, 50 மொய் வசூலிக்கும் ஹைடெக் கவுண்டர் உள்ளிட்ட அடுக்கடுக்கான பிரம்மாண்டங்களுடன் மகனின் திருமணத்தை அமைச்சர் நடத்தி முடித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயா, தனது வளர்ப்பு மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய போது பலரது  விமர்சனத்திற்கு உள்ளானார்.  அதே பாணியில், அமைச்சரும் நடத்தியுள்ள இந்த திருமணம்  பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here