தமிழகத்தில் அண்மை காலமாக தி.மு.க. அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவம்பர் 3) அதிகாலை முதல் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்களுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி சென்னை தி.நகர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரது வீடு என பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.