தமிழக அரசுடன் இணைந்து போக்குவரத்து கழகமானது, வார இறுதி நாட்களில் பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்தில் சிரமம் ஏற்படாத வண்ணம் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 18) விநாயகர் சதுர்த்தியை கொண்டாடப்பட இருப்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊர் செல்ல விரும்புவர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 1,250 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து, சாலை போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ நிர்வாகமும் சில சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் கடைசியாக புறப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல 9 நிமிடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக இரவு 8 முதல் 10 மணி வரை மட்டும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சேவை மாற்றம் இன்று (செப்டம்பர் 15) மட்டுமே என்றும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.