தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருவதால், மாநிலம் முழுவதும் உள்ள 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களை அதிவிரைவாக ஆசிரியர்கள் தயார் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்த கால இடைவெளிக்குள், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் சமீப தினங்களாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கனமழை காரணமாக இன்று சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here