தமிழக மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய பயனர்களை இணைக்க அரசு செய்த சூப்பர் ஏற்பாடு!!

0
தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், சுமார் ஒரு கோடியே 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிக்கு (மகளிருக்கு) மாதந்தோறும் ரூ. 1000 அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பயன் பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதனால், புதிய ரேஷன் கார்டை பெற விண்ணப்பித்துள்ள பலர் வெகு மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால், கடந்த ஆண்டில் திருமணமானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் அவசியம் கருதி புதிய அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு புதிய ரேஷன் கார்டு வழங்க படுமேயானால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here