மகளிர் உரிமை தொகையில் அதிரடி மாற்றம்…, இனி இந்த தேதியில் தான் கிடைக்கும்?? வெளியான முக்கிய தகவல்!!

0
மகளிர் உரிமை தொகையில் அதிரடி மாற்றம்..., இனி இந்த தேதியில் தான் கிடைக்கும்?? வெளியான முக்கிய தகவல்!!
மகளிர் உரிமை தொகையில் அதிரடி மாற்றம்..., இனி இந்த தேதியில் தான் கிடைக்கும்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசானது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் திட்டத்தின் பயனாளர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் (நவம்பர்) மட்டும் தீபாவளி பண்டிகைக் காரணமாக நவம்பர் 10 ஆம் தேதியே திட்ட பயனாளர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும், ஏற்கனவே 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்று வந்த நிலையில், இம்மாதம் கூடுதலாக மேல் முறையீடு செய்தவர்களில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில், இனி வரும் மாதங்களில் 15 ஆம் தேதி இந்த உரிமை தொகையை வழங்காமல், மகளிர் தங்களின் குடும்பத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாதத்தின் முதல் வாரத்திலேயே வழங்குவதற்கு அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Book Materials, Online Course & Test Pack TNPSC சலுகை விலையில் பெறுவதற்கு இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here