தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வழங்கப்பட்ட இந்த உரிமை தொகை, நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதியே வழங்கப்பட்டது.

இதில் குறிப்பாக, 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மகளிர் உரிமை பெற்று வந்த நிலையில், சுமார் 11 லட்சம் பேர் இந்த திட்டத்திற்கு மேல் முறையீடு செய்தனர். இவர்களில் சுமார் 7 லட்சம் இந்த மாதம் மகளிர் உரிமை தொகையை பெற்றுள்ளனர். இந்நிலையில், முன்கூட்டியே இந்த மாதம் திட்டத்தின் பயனாளர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டதால் அடுத்த (டிசம்பர்) மாதம் வழக்கத்தை விட தாமதமாகவே வழங்கப்படும் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.