தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா – அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா - அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!!
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா - அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

 சுகாதாரத்துறை கடிதம் :

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப தினமாக, குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில்,  கடந்த ஏப்ரல் மாதம் தினசரி பதிவு 22 ஆக பதிவாகி வந்த நிலையில், தற்போது அது 100ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

மாவட்டம் முழுவதும் மீண்டும் 144 தடை உத்தரவு அமல் - அரசு அதிரடி உத்தரவு!!

இதையடுத்து, தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி வைரஸ், பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here