தமிழகத்தில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0
Lockdown
Lockdown

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு??

தமிழகத்தில் இதுவரை 7,813,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 117,992 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது வரை 7,013,569 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த நாட்களை ஒப்பிடுகையில் இது சற்று குறைவு தான் என்றாலும் முழுவதும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் இரவு 10 மணிவரை கடைகளை திறந்திருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

cmo of tamilnadu
cmo of tamilnadu

வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பள்ளி & கல்லூரிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு மற்றும் புறநகர் ரயில் சேவை தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் நலிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுப்பது, பண்டிகைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் உள்ளது. எனவே மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here