தமிழகத்தில் போக்குவரத்து, திரையரங்கு, ஹோட்டல்களுக்கு இனி 50% தான் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்:

 • பொதுப் போக்குவரத்து மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 • பொது போக்குவரத்து மற்றும் பேருந்து, ஹோட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

 • கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் காம்ப்ளக்ஸ்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
 • பணிக்கு செல்லும் ஊழியர்கள் அந்த நிறுவனம் கொடுத்த அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் 100 நபர்களுக்கும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களும் மட்டுமே அனுமதி
 • ஜிம்கள், சலூன்கள், பியூட்டி பார்லர்கள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கலாசார நிகழ்வுகள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் புத்தக கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
 • துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி
 • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர் 9.1 .2022 க்குள், தடுப்பு ஊசி செலுத்தி, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
 • கடைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் பொது இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
 • மழலையர் பள்ளி, 1 முதல் 9 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு விடுமுறை அளிக்கப்படுகிறது.
 • 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி தவிர மற்ற அனைத்து கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
 • நோய்க் கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் நடத்தப்படும்.
 • பொதுமக்கள் அவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here