Monday, June 14, 2021

சற்று முன்: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு??? உயர் அதிகாரிகள் பரிந்துரை!!!

Must Read

தற்போது தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது.


தமிழகத்தில் வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் மேலும் ஒரு வாரம் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல் அமைச்சர் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு பெரும் அதிர்ச்சி – 2 சீரியல நிறுத்த போறாங்களாம்!!

இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களும் புதிய கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்த போவதாக தகவல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -