தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு: எதெற்கெல்லாம் அனுமதி???

0

கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு வரும் ஜூன் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கானது மேலும் ஒரு வாரம் அதாவது ஜூலை 5ம் தேதி வரை நீடித்து சில தளர்வுகளை அறிவித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதாவது தொற்று பரவல் அடிப்படையில் தமிழக மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தளர்வுகளை அறிவித்துள்ளது. வகை ஒன்றில் கோயம்புத்தூர்‌, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களும், வகை 2ல் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை,திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருச்சிராப்பள்ளி உட்பட 23 மாவட்டங்களும், வகை 3ல் சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களும் உள்ளன.

வகை 1ல் தொற்று குறைவதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடன் கடைகள்,மற்ற பிற செயல்பாடுகள் மாலை 7 மணி வரை நேர அதிகரிப்பை அளித்து உள்ளது. மேலும் கூடுதலாக தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் கொண்ட கடைகள்,பாத்திர கடைகள், பேன்சி மற்றும் அழகு சாதனங்கள் மற்றும் அவை தொடர்பான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.

செல்பேசி மற்றும் கணினி சம்பந்தப்பட்ட கடைகள்,வாகன உதிரி பாகங்கள் மற்றும் அது தொடர்ப்புடையவை,மின்சார பொருள்கள் மற்றும் அவை பழுது பார்க்கும் கடைகள்,கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்து உள்ளது. அரசின் அத்தியாவசிய துறைகள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன், மற்ற அரசு துறைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதித்து உள்ளது. தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் , 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடை பயிற்சிக்காக மட்டும் அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6 மணி முதல் 9 மணி செயல்பட அனுமதித்து உள்ளது.வகை இரண்டில் ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடன் கடைகள்,மற்ற பிற செயல்பாடுகள் மாலை 7 மணி வரை நேர அதிகரிப்பை அளித்து உள்ளது. மேலும் பாத்திரக் கடைகள்,பேன்சி ,அழகு சாதன பொருட்கள் ,சலவை,தையல் அச்சங்கள் மற்றும் பல,  காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்கு இடையே நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி அல்லாத பேருந்துகளில் 50% சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் வகை 3ல் ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடன் கூடுதலாக நேர தளர்வுகள் மற்றும் பல தளர்வுகளுடன் சேர்த்து  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல தளர்வுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here