ரயிலில் இனி இத செஞ்சா கைது தான்…, எச்சரிக்கை விடுத்த ரயில்வே நிர்வாகம்!!

0
ரயிலில் இனி இத செஞ்சா கைது தான்..., எச்சரிக்கை விடுத்த ரயில்வே நிர்வாகம்!!
ரயிலில் இனி இத செஞ்சா கைது தான்..., எச்சரிக்கை விடுத்த ரயில்வே நிர்வாகம்!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொது மக்கள், மாணவர்கள் பலர் பேருந்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, லோக்கல் ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் பலர், செய்யக்கூடாத செயல்களை செய்து வருகின்றனர். அதாவது, ஆயுதங்களுடன் வன்முறை, சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக பல அறிவுரைகளை வழங்கிய போதும், இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். இதனால், ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, “வன்முறை சாகசங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி எந்த பயனும் இல்லை என்பதால், கைது நடவடிக்கை தான் இனி மேற்கொள்ளப்படும். மேலும், மாணவர்களின் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, கல்லூரிகளில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா தெரிவித்துள்ளார்.

அப்படி போடு.., பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., யாருன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here