தமிழக பள்ளிகளுக்கு பொது விடுமுறை – அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
மாநிலம் முழுவதும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!
தமிழக பள்ளிகளுக்கு பொது விடுமுறை - அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள 9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 உள்ளூர் விடுமுறை:

கொரோனா பரவலுக்கு பின்  பொதுமக்கள் பண்டிகைகளை ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இந்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. கேரள மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த பண்டிகை, ஒரு சில மக்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி, வியாழக்கிழமை ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் முழு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த, உள்ளூர் விடுமுறைக்கு பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here