தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுக்கு எதிரான புதிய சட்டம் – இன்று முதல் அமல்! முதல்வர் தொடங்கி வைப்பு!!

0
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுக்கு எதிரான புதிய சட்டம் - இன்று முதல் அமல்! முதல்வர் தொடங்கி வைப்பு!!
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுக்கு எதிரான புதிய சட்டம் - இன்று முதல் அமல்! முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் போலி பத்திர பதிவு மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கு ஆப்பு வைக்கும் புதிய பதிவு சட்டம், மாநிலம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

முதல்வர் அதிரடி :

தமிழகத்தில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட போலி பத்திரங்கள், மற்றும் சட்டவிரோத ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம், இதுவரை பத்திர பதிவு அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் போலி பத்திரங்களால், பாதிக்கப்படுவோர் சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை கருத்தில் கொண்டு அரசு, அதிரடி சட்ட திருத்தத்தை கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. புதிதாக, 1908 22(பி ) என்ற பத்திர பதிவு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – தீபாவளி சர்ப்ரைஸ் என்ன தெரியுமா? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

இந்த புதிய சட்டம், செப். 28ம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மோசடி பத்திரப் பதிவுக்கு, எதிரான அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here