தமிழகத்தில் ஊக்கத் தொகையுடன் இலவச மருத்துவ படிப்பு – 100% வேலைவாய்ப்பு உறுதி! முழு விவரங்கள் உள்ளே!!

0
தமிழகத்தில் ஊக்கத் தொகையுடன் இலவச மருத்துவ படிப்பு - 100% வேலைவாய்ப்பு உறுதி! முழு விவரங்கள் உள்ளே!!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகத்தின், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கான இலவச டிப்ளமோ மருத்துவ படிப்பு குறித்த, முக்கிய அறிவிப்பை தேனி நலம் அகாடமி வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பு :

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கான அவசர சிகிச்சை உதவியாளர், சர்க்கரை நோய் ஆலோசகர் உள்ளிட்ட இலவச மருத்துவப் படிப்புகள் குறித்த அறிவிப்பை தேனி நலம் அகாடமி வெளியிட்டுள்ளது. இந்த படிப்பில் சேர 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த படிப்பில் இந்திய மருத்துவ கழகம் வழங்கும் டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன், டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான அட்மிஷன் தற்போது தொடங்கியுள்ளது. இதில் படிப்போருக்கு அரசு சான்றிதழ்,100% வேலைவாய்ப்பு, இலவச சீருடை, புத்தகம் மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் வழங்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் சேர விரும்புவோர் தேனி நல மருத்துவமனைக்கு, நேரடியாகவோ அல்லது 88700 07020 என்ற அலைபேசியிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here