தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் ., 5 லட்சம் பேருக்கு வேலை ரெடி – தொழில்துறை அமைச்சர் குட் நியூஸ்!!

0
தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் ., 5 லட்சம் பேருக்கு வேலை ரெடி - தொழில்துறை அமைச்சர் குட் நியூஸ்!!
தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் ., 5 லட்சம் பேருக்கு வேலை ரெடி - தொழில்துறை அமைச்சர் குட் நியூஸ்!!

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தர இலக்கு நிர்ணயித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கணேசன் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் உறுதி:

கொரோனா தொற்றுக்கு பின்பு, தொழில் துறையில் குறிப்பிடத் தகுந்த பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக பல வேலைவாய்ப்பு முகாம்கள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி, மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் கணேசன், சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். மாநிலத்தில் இதுவரை, 67 இடங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம், 1.07 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஐந்தாண்டுகளில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இது சாத்தியமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சால் வேலையில்லா இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here