இந்தியாவின், தென் பகுதியில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை மையமானது பருவ நிலை மாற்றம் காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி வரை மிதமான முதல் லேசானது வரை கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.