தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்? அரசின் முடிவால் ஆடிப்போன மக்கள்!!

0
தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்? அரசின் முடிவால் ஆடிப்போன மக்கள்!!

தமிழக அரசுக்கு மின் வாரியத்தின் மூலமாக  பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் விரைவில் மின் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு:

தமிழகத்தில் அண்மையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட  உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திற்குள் மின்வாரியம் தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை மின்சாரம்  ஆணையத்திடம் ஒப்படைக்கும்.

இந்த அறிக்கையை ஆணையம் ஆய்வு செய்து வருவாயை விட செலவு அதிகம் வந்திருந்தால் அந்த பற்றாக்குறையை போக்கும் விதமாக மின் கட்டணம் உயரத்தப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டில் மின் வாரியத்திற்கு ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால், 11 ஆயிரத்து 213 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஏற்பட்ட இழப்பீடு அதிகமாக இருப்பதால் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.

TNEB

இந்த கட்டண உயர்வு குறித்து, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மின் கட்டணத்தை உயர்த்துவதை பற்றிய அறிக்கை கூடிய விரைவில் வெளிவரும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here