
தமிழகத்தில் ஒரு சில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை அமைச்சர் முத்துசாமி அண்மையில் மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் பலரும் நடப்பாண்டு தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இருந்தனர்.
நீட் தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி அட்டவணை., NBEMS வெளியீடு!!!
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் உறுதி அளித்து இருந்தார். அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.