
தமிழகத்தில் அரசு போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பலரும் போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் குறித்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
அப்போது அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 சதவீத போனஸ் வழங்க ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதன்படி தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.
உங்களிடம் 2000 ரூ நோட்டு உள்ளதா?? மாற்றிக்கொள்ள இதோ அறிய வாய்ப்பு.., RBI வெளியிட்ட தகவல்!!!!