Students.. Get Ready.. பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக அரசு வெளியீடு!!

0
schools-mask

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை தமிழகத்தில் சரியாக திறக்கப்படவில்லை. மேலும் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • பள்ளிகளில் ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்
  • அனைத்து பள்ளி கூடங்களிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
  • பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளான விட்டமின் சி மாத்திரைகளை வழங்க வேண்டும்
  • பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
  • பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்
  • கொரோனா நோய் தொற்று அறிகுறியுடன் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களை ஒரு போதும் பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here