
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் குடிநீர் வாரிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு 2022 அக்டோபர் 1 முதலே அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்த வேண்டும். இந்த அகவிலைப்படி தொகையை கணக்கிட்டு 4 மாதத்திற்குள் வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா??