தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? – முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை!!

0

கொரோனா தொற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை குறைந்த தொற்று தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு 2000ஐ நெருங்கி பதிவாகி வருகிறது. நிபுணர்களும் தற்போது உள்ள நிலைமை நீடித்தால் செப்டம்பர் மாதத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு நிபுணர்கள் கூறியது போல தொற்று பாதிப்பு அதிகரித்தால் மாநில அரசு தீவிரமான முழு ஊரடங்கை அமல்படுத்தும். தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது அல்லது அதிகரிக்கும் நோய் தொற்றை கருத்தில் கொண்டும் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here