“ஆசிரியர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது” – ஓ.பன்னீர் செல்வம் கொந்தளிப்பு!!!

0
"ஆசிரியர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது" - ஓ.பன்னீர் செல்வம் கொந்தளிப்பு!!!

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் தொடர்ந்து பாடு பட்டு வருகின்றனர். அதே போன்று தமிழக அரசும் பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு மேற்கொண்ட நிதி பரிமாற்றத்தால் சிக்கல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவானது. இந்த சிக்கலை விரைவில் சரிசெய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் தடைபட்டுக் கொண்டே வருகிறது.

அயோத்தியில் ஜன.14ம் தேதி ராமர் சிலை நிறுவ முடிவு., ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவிப்பு!!

இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மூன்று மாதங்களாக தடைபடுவது அரசின் கண்டிக்கத்தக்க செயல் என ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் குடும்ப நலன் கருதி இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை வழங்க முதலமைச்சர் முன்வர வேண்டும். மேலும் இது போன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here