தமிழகத்தில் இந்த தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்.,  அரசின் முடிவுக்கு நீதிபதிகள் பாராட்டு!!!

0

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்கள் தேவைப்பட்டதால், தற்காலிக அடிப்படையில் 2366 பேரை தமிழக அரசு நியமித்து இருந்தது. இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்தாண்டு 977 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு…, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட திடீர் அப்டேட்!!

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தற்போதைய காலிப்பணியிடங்களில் 977 தற்காலிக செவிலியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று (பிப்.8) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முதல் கட்டமாக சீனியாரிட்டி, இட ஒதுக்கீடு முறையில் 977 பேரும், இனி உருவாகும் காலியிடங்களில் மீதமுள்ளவர்களும் நியமிக்க இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அரசின் இந்த முடிவு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here