
தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு தடையில்லாத மருத்துவ சேவை கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் பல அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளவைதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்து இருந்தார்.
பட வாய்ப்பு கிடைக்காத விரக்தி., சினிமாவை விட்டு அந்த தொழிலுக்கு குதித்த சிவகார்த்திகேயன் பட நடிகை!!!
அதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு மருத்துவ துறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் என 5,000 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணியாளர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.