சாத்தான்குளம் போலீஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது தமிழக அரசு..!

0

சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சாத்தான்குளம் விவகாரம்..!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 18ம் தேதி ஜெயக்குமார் என்ற ஒரு இளைஞர் மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகியோர் வடிவு என்பவரது மகன் மகேந்திரனை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதன் பின்னர் மகேந்திரன் காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டு மே 24ம் தேதி விடுவிக்கபடுகிறார். விசாரணையில் பலத்த காயமடைந்த மகனை வடிவு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழக்கிறார்.

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கம் – மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட தனது மகன் இறந்துவிட்டான் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு முறையீடுகளை செய்திருந்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தான் அவருடைய தாயார் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி பொக்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்திருந்த போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது அந்த வழக்கு மீண்டும் பொக்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here