ஆகஸ்ட் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம்?? தமிழக அரசு விளக்கம்!!

0

ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி இலவசப் பொருட்கள் கிடையாது..!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதற்கிடையே ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும் அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாயவிலைக் கடைகளில் விலை இன்றி வழங்கப்பட்டது. ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

தகுந்த காரணம் இன்றி கைது செய்யக்கூடாது – டிஜிபி சுற்றறிக்கை!!

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here