தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பு – டிச.15க்குள் சீரமைக்க உத்தரவு!!

0
Salary
Salary

கொரோனா பரவல் காரணமாக பல மாநில அரசுகள் வருவாய் இழப்பை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்தனர். இருப்பினும் தமிழகத்தில் அம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்குவது நிறுத்தம், விழாக்களில் தேவைற்ற செலவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையில் 7வது ஊதிய விகிதம் அமலுக்கு வந்துள்ளதால் சம்பளம் குறைக்கப்பட உள்ளது.

சம்பள குறைப்பு:

தமிழக அரசின் 220 துறைகளின் 52 பிரிவு ஊழியர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தின் கீழ் சம்பள சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அரசு அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்காத காரணத்தால் நவம்பர் மாதம் பழைய ஊதியமே வழங்கப்பட்டது. ஆனால் புதிய ஊதிய சீரமைப்பின்படி, அரசு பொறியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதிய குறைப்பு ஏற்படும். இருப்பினும் பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சீரமைக்கப்பட்ட ஊதியம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு!!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய விகித அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயம் செய்து அதற்கான பட்டியலை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் டிசம்பர் மாத ஊதியத்தில் இருந்து இந்த புதிய சீரமைக்கப்பட்ட ஊதியம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here