தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கல்விக் கட்டணம் வசூல் – தமிழக அரசு அனுமதி!!

0
Tamilnadu Government
Tamilnadu Government

தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி கட்டணம்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மூன்று வேளை உணவிற்கே மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணத்தை செலுத்துமாறு நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. அதனை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செல்போன் செயலிகளை அழிக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு..!

இதில் பதிலளித்த தமிழக அரசு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும், வற்புறுத்தக் கூடாது என தெரிவித்து இருந்தது. இதை ஏற்ற நீதிமன்றம் இது குறித்து திட்டத்தை வகுக்குமாறு உத்தரவிட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க எடுக்கப்பட்ட முடிவிற்கு தமிழக அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. ஆனால் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here