தமிழகத்தில் உருவானது புதிய மாநகராட்சி – சட்டசபையில் மாநில அரசு அறிவிப்பு!!

0

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில், நகராட்சியாக இருக்கும் தாம்பரம் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

நடந்து வரும் சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக சென்னை அருகே உள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம்,  நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படுகிறது.

மேலும் தாம்பரத்தை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளும் புதிய மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here