தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு அனுமதி!!

0

தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் 75 சதவீத கல்விக்கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கல்விக்கட்டணம்:

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் வற்புறுத்தி கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் ஏற்கனவே விளக்கம் அளித்த தமிழக அரசு தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இன்று தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு சார்பில் பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது.

அதில் தமிழக தனியார் பள்ளிகள் 3 தவணைகளில் 75% கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here