தமிழக அரசானது மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதுடன், அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி உள்ள இந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்கள் முதல், மகளிர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் வரை என அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட அரசு தயாராகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது,
- கலைஞரின் மகளிர் உரிமை தொகை ரூ.1000-த்தை குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்க இருக்கிறது.
- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகவும் எதிர்பார்த்த ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி, இந்த மாதத்தில் தான் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தமிழக அரசும் அகவிலைப்படி குறித்த முக்கிய அப்டேட்டை இந்த மாதத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறைகளும் இந்த மாதத்தில் அளிக்கப்பட உள்ளது. அதாவது, செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
- இது போக, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த செப்டம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.