தமிழகத்தில் அதிகரிக்கும் பருவகால நோய்கள் – அரசு எடுத்த அதிரடி முடிவு! வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் பருவகால நோய்கள் - அரசு எடுத்த அதிரடி முடிவு! வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!
தமிழகத்தில் அதிகரிக்கும் பருவகால நோய்கள் - அரசு எடுத்த அதிரடி முடிவு! வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உள்ளிட்ட சீசன் நோய்கள் பரவி வருவதால், மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

சுகாதாரத்துறை அதிரடி :

தமிழகத்தில் கொரோனா தொற்று, இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது பருவ கால நோய்கள் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வைரஸ் தொற்று கொஞ்சம், கட்டுக்குள் உள்ளது என மக்கள் மகிழ்ச்சி அடையும் நிலையில் இன்ஃப்ளுயன்சா, டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்கள் பரவ தொடங்கியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த சீசன் நோய்கள் குறித்து பேசிய, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநிலம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக H1N1 வைரஸ் பாதிப்பு 1126 பேருக்கு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் 46 பேர் குழந்தைகள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், இந்த சாதாரண காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று ஆறுதல் அளித்தார்.

அரசு வழங்கும் இலவச சைக்கிளின் விலை ரூ.200.., பள்ளி மாணவர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல்!!

மேலும், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால், பருவ கால நோய்களை விரட்டி விடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here