தமிழக அரசு பள்ளிகளில் இனி இதற்கு தட்டுப்பாடே இருக்காது…, கல்வி இயக்குநரகத்தின் அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் இணைய வசதியுடன் கூடிய நவீன வகுப்பறைகளை அமைத்து மாணவர்களின் கல்வித் திறனை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 372 அரசுப் பள்ளிகளில் 1881 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகளுக்கு டான்சி நிறுவனத்தின் மூலம் 18,810 மேஜையுடன் கூடிய இருக்கைகள் கொள்முதல் செய்து கொள்ள சமீபத்தில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, மேஜையுடன் கூடிய இருக்கைகள் அனைத்து பள்ளிகளுக்கு சரியான எண்ணிக்கையில் சென்று அடைந்ததா? அவற்றின் தரம் உள்ளிட்டவற்றை மாவட்ட வாரியாக வல்லுநர் குழுகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆய்வு செய்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் குறித்த ஆவணங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்க  வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here